Monday, April 16, 2012

நீ தேவையில்லை எனக்கு.

பெண்ணே !!

நண்பன் வினவுகிறான் .. பிரிந்துவிட்டிர்களா ? (நக்கலான ஒரு வியப்புடன்)..

ஏன்? ஏதற்காக ? ஏப்படி ? யார் காரணம் ?

நானும் இந்த 3 வருட காலத்தில் யோசித்து பார்க்கிறேன்.

காரணம் நீயா ? நானா ? எனக்குள் விடை காணமுடியவில்லை.

இனி யோசித்தும் ஒன்றும் ஆக போவதில்லை. இந்த 3 வருடத்தில் இரு முறை நேரில் பார்த்துள்ளேன்.

நேரில் பார்த்தபொழுது நீ காண்பித்த முக பாவம், பயம் .. அப்பட்டமான பயம், எங்கே பேசி விடுவானோ என்று.

எனக்கே தெரியவில்லை, ஏன் ? எதற்கு ?

காதல் (அப்படி ஒன்று நமக்குள் இருந்ததாம், ஊர் சொல்கிறது) என்கிற விளையாட்டு நமக்குள் நடக்கும் பொழுது,

நான் எப்படி இருந்தேனோ அப்படியே ஏற்றுக் கொண்டாய் , நானும் உன்னை அப்படியே ஏற்றுக் கொண்டேன் !

இல்லை இல்லை, நீ எனக்கு தேவையென நீ, எனக்கு நீ தேவையென நான் சொன்ன பொழுது கூட, என் நண்பி எச்சரித்தாள்.

ஆனால், காலம், விதியால் நம் உறவு கல்லூரியின் கடைசிவருடத்தில் காதலாய்(!) மாறியது.

ஆனால், அதற்கு மேல் திருமணம் என்ற உறவிற்க்குள் நுழைய நீ மறுப்பாய் என நான் யோசித்தது கூட இல்லை.

நம் கல்லூரி நாட்களில், உனக்கு நான் சரி வரமாட்டேன், உன் தகுதிக்கேற்ப ஒருவன் உனக்கு கிடைப்பான் என

நான் சொன்ன பொழுது, நீ விட்ட கண்ணீர் இன்னும் என் மனக்கண்ணில் நிற்க்கிறது. அந்த ஈரம் கூட காயவில்லை என்னுள்.

கல்லூரி முடிந்ததும், விரிசல் விட ஆரம்பித்த நம் உறவு, ஏனோ வெகு வேகமாய் பிரிந்தது. நான்கூட, நாம் விட்டுக் கொண்ட

செல்ல சண்டைகளில் இதுவும் ஒன்று என்றெண்ணி, வேலை தேட..

வேலை கிடைத்தால், உன்னை உன் விட்டில் இருந்து தூக்கி வந்து விடலாம் என்ற உத்வேகத்தில்

வேலை தேடினேன், வேலை கிடைத்ததை உனக்கு குறுஞ்செய்தி அனுப்பி, பதிலிலாமல் நான் உன்னை மறக்கவும் முடியாமல்,

6 மாதங்கள் பைத்தியமாய் இரவு துக்கம் தொலைத்ததை நீ அறிவாயா ? இல்லை இந்த ஊர் அறியுமா ?

உன்னை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயன்றபொழுது, பதில்மொழி இல்லாமல் கல் நெஞ்சாய் இருக்க எப்பொழுது, யாரிடம்

கற்றுக் கொண்டாய், யாருடைய தொடர்பும் இல்லாது வடகிழக்கில் காலம் தள்ள நான் கற்றுக்கொண்டேன்.

நீ மேற்க்கொண்டு படிக்கிறாய் என்று கேள்விப்பட்டு, உன்னை கல்லூரியில் பார்த்துவிடலாம் என எண்ணி,

அடுத்த நாளே, விமானம் பிடித்து வந்து கல்லூரியில் காலைமுதல் அலைந்து, மாலையில் உன்னை கண்ட பொழுது,

ஓரே வரி பேசி, அதனால் கல்லூரியில் நான் கேள்விகளால் துளைக்கப்பட்டது உனக்கு தெரியுமா ?

ஏனோ நேரில் 2 வருடம்கழித்து, பார்க்கும் போது ” நன்றாக இருக்கிறாயா ?” என ஒரு வரிக்குக் கூட ம்ம்ம்ம் எனப் பதில்

சொன்ன உனக்கு, அதை கூட திரும்பி கேட்க மனமில்லை !

இப்பொழுது நண்பன் ஒருவன் விளையாட்டாய் சொல்கிறான், தூக்கிறாலாமா ? இவர் உயிர் கொடுத்தாவது (!) உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று.

என்னால் எப்படி சொல்லமுடியும். நீ வேண்டுமென்று.!

எனக்கு நீ தேவையில்லை. எனது காதலி (!), எனது மனைவி என்னுடன் இருக்கிறாள் !

உன்னுடன் நான் கொண்ட உறவு, கல்லூரி முடிய என நீ முடித்துவிட்டாய் ! என்னால் முடியவில்லை என் கண்ணே !

எப்பொழுதும், நீயும் உன் நினைவுகளும் என்னுடனே உள்ளது, என்னவளை நான் கந்தர்வ மணம் முடித்துள்ளேன்.

நீ தேவையில்லை எனக்கு.

Sunday, January 1, 2012

2012 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!

Indigo Boy





போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.



எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.



பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?



ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !



இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.



திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.



தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோரின் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.



தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனைகளுக்கு வழி வகுத்திருக்கிறது.



இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி எல்லோரையும் பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என எச்சரிக்கை செய்யவும் துவங்கினானாம்.



தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச் சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை தூக்கிச் சாப்பிடுகிறது.



லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதையும், அதுகுறித்த படங்களைப் பார்த்து ஏதேனும் கருத்துக்களைச் சொல்வதும் என புல்லரிக்க வைக்கிறான் இந்தச் சிறுவன்.



லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.



இவனுடைய அதிமேதாவித் தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது தவறு என மேதாவித்தனமாக விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு வழியின்றி இப்போது தனியாக படித்து வருகிறானாம்.



உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.



இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.



உலகில் நிகழும் அழிவு நிகழ்வுகளின் போது அவனை மாபெரும் வலியும், பதட்டமும், நிம்மதியின்மையும் அலைக்கழிக்கும் என அவனது தாய் கண்கள் பனிக்க சொல்கிறார்.



மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.



செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.



செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த நிகழ்வுகளையும் மணிக்கணக்காய் பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில் பார்த்தவை என்கிறான்.



பிரமிடுகளைக் குறித்து பேசும்போது, மக்கள் இப்போது நினைப்பது போல Cheops பிரமிடில் இருந்து பழங்கால வரலாறுகள் எதுவும் தெரிய வராது எனவும், அவையெல்லாம் இன்னோர் பிரமிடில் இருக்கிறது ஆனால் அந்த பிரமிட் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அவன் திகைக்க வைக்கிறான்.



செவ்வாயை நெருங்கும் போது ஏன் விண்கலங்கள் எல்லாம் எரிந்து விடுகின்றன என விஞ்ஞானிகளில் தலையைப் பிய்க்கும் கேள்வியைக் கேட்டனர். அதற்கு அவன், இந்த விண்கலங்களில் உள்ள கதிர்களெல்லாம் அவர்களைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் வேறு கதிர்களும், சமிச்ஞைகளும் அனுப்பி அவற்றை அழிக்கின்றனர் என்கிறான்.



விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக படம் வரைந்து பாகங்களைக் குறிக்கிறான் இவன்.



உதாரணமாக,



விண்கலம் ஆறு அடுக்குகளைக் கொண்டது. மேல் பாகம் இருபத்து ஐந்து விழுக்காடு உறுதியான உலோகத்தால் ஆனது. இரண்டாவது அடுக்கு முப்பது விழுக்காடு ரப்பரால் ஆனது. மூன்றாவது அடுக்கு முப்பது விழுக்காடு உலோகத்தாலும், கடைசி அடுக்கு காந்தப் பொருட்களாலும் ஆனது. இந்தக் காந்தத்தில் விசையைச் செலுத்தினால் இந்த விண்கலம் பிரபஞ்சத்தில் எங்கே வேண்டுமானாலும் செல்லும் என்கிறான்.



இவனுடைய அலட்சியமான உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர். ஏனெனில் இவன் பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில் !



ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான் காரணம். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் நம்மை மன்னிக்கச் சொல்லி விண்ணப்பிக்க வேண்டும். என சாத்வீக ஆன்மீகவாதியாகிறான்.



இவன் சொல்வதில் எதை நம்புவது, எதை விடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் பல நிலைகளிலுமுள்ள மக்கள்.

Tuesday, November 22, 2011

Out Of Box Thinking

கணித மேதைகள் மூன்று பேர்+ஒரு சாதாரண ஆள் இவர்கள் நாலு பேரையும் ஒரு சிறையில் அடைத்து ஒரு சிக்கலான புதிரைக் கொடுத்து அதை விடுவிக்க சொன்னார்களாம். அந்த புதிரின் விடையின் படி அந்த சிறைக்கதவின் பூட்டை செட் செய்தால் அது திறந்து கொள்ளுமாம். கணித மேதைகள் மூன்று பேரும் மணிக்கணக்காக பேப்பர்களை வைத்துக் கொண்டு புதிரை விடுவிக்க மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த போது அந்த சாதாரண  ஆள் கூலாக உட்கார்ந்திருந்தானாம்.
பின்னர் மெதுவாக நடந்து சென்று கதவைத் தள்ள அது திறந்து கொண்டதாம். அதாவது கதவு பூட்டப்படவே இல்லை.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் இன்னொரு விஷயம் என்ன என்றால் Before working on the solutions, make sure the problem really exists! இதுதான் OUT OF BOX சிந்தனை

அன்பு பரிசு

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..
ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. ” மாமியாரின் அன்புப்பரிசு..”ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.
மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்.. “போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்துவச்சிருக்க..?” மாமியார் செத்துட்டுது..
மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.
“மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!
G+ ல்  ஈரோடு தங்கதுரை பகிர்ந்தது...

தமிழக மக்களின் இன்றைய நிலை


மதி..... Always Rocks
24348421
நன்றி தினமணி