இந்த உலகம் உண்மையிலேயே சிறியது தான் ... நான் பதிவு இட்ட சில மணித்துளிகளில் படித்து , உன்னால் முடியும் என உற்சாகமாய் பின்னோட்டம் (comments) அனுப்பிய என் நண்பன் சுப்புவிற்கு நன்றி .
இந்த விபரித முயற்சி தேவைதானா என மிகவும் யோசித்தேன் . ஏன் எனது அந்தரங்கங்களை மற்றவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டுமென யோசிக்கும் பொது , கிடைத்த பதில் . எனது வாழ்வின் சில விடயங்கள் நண்பர்கள் சிலருக்கு தெரிந்திருக்கலாம் , சிலரிடம் நானே தூக்கம் வராத இரவுகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் . ஆனால், மிகப் பல விடயங்கள் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மைகளாக இருந்து விட நான் விடக்கூடாது. அந்த விடயங்கள் என்னுடன் முடிந்து போகக் கூடாது.
அது ஒரு மின்னணு பொக்கிசமாக பாதுகாத்து கொள்ள எத்தனிக்கிறேன் . இந்த முயற்சிக்கு உந்துகோலாய் அமைந்த , எனது அறை நண்பன் ட்ரோஜன் (Trojan) க்கு நன்றி (அவனது வாழ்க்கை முக்கிய நிகழ்வுகளை ஒரு மின்னணு கோப்பாய் பாதுகாத்து வருகிறான் , படங்களுடன் ).
சரி , அதனை பதிவுகளாய் இட முயலும் பொது கண்டிப்பாய் சில வரைமுறைகளை வகுத்தாக வேண்டும். அல்லது தவறாக முடிந்து விடக்கூடும் , என நான் எண்ணுகிறேன். யாருடைய நிகழ்கால வாழ்கையும் பாதித்து விட காரணமாய் அமைய விடக்கூடாது. அதனால் , சில இடங்களில் எனது நிகழ்வுகளில் இருந்து சிலவற்றை மறைக்க வேண்டும் , சிலரது பெயர்களை மாற்ற கூட தேவைப்படும். அத்தகைய தருணங்களில் படிப்பவர்களுக்கும் தெரியாமல் பார்த்து கொண்டால் தான் ஒரு நல்ல எழுத்துக்களாய் முற்று பெரும் .
சரி , எழுத்து நடை(Writing Style) எவ்வாறாக இருந்தால் நன்றாக அமையும் என யோசிக்கும் பொழுது ? அது கதை சொல்வதாக அமைந்தால், சுவை குன்றி விடலாம் எனவே ஒரு விடை தெரிந்த நாவலாக கொண்டு செல்ல முயற்சிக்கிறேன் . அவ்வப்பொழுது சில கதா பாத்திரங்களுக்கு சில விடயங்களை சொல்ல அன்புடன் ஒரு குட்டிகடிதம் (அ.ஒ.கு.க) எழுத ஆவலாக உள்ளேன்.அது ஒரு நன்றி மடலாக கூட அமைந்து விடலாம் , பார்க்கலாம் என்னுடைய இந்த முயற்சி எவ்வளவு தூரம் போகுமென ........
எப்பொழுது இதனை எழுதி உங்களுடைய பார்வைக்கு கொண்டு வரலாம் ? எழுத நேரம் கிடைக்கும் போதா ? இல்லை ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு இதழை போலா ? பார்க்கலாம் அது படித்து கொண்டிருக்கும் இந்த நண்பர்களின் வரவேற்ப்பை பொறுத்து இருப்பது நல்லது .
மீண்டும் என்னுடைய நன்றி ..... மற்றுமொரு பதிவில் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் ......................