அமெரிக்காவில் சர்வே ஒன்று நடத்தியிருக்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு எந்தெந்த நாடுகள் பிடித்திருக்கின்றன, எந்தெந்த நாடுகள் பிடிக்கவில்லை? தெரிந்துகொள்ள கீழே உள்ள வரைபடத்தைப் பாருங்கள்.
பிடித்த முதல் நாடு, கனடா. பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக இந்தியா. பிடிக்காத நாடுகளில் கடைசி இடம், இரானுக்கு. 29 சதவீதம் பேருக்கு க்யூபா பிடித்திருக்கிறது. ரஷ்யாவை 47 சதவீதம் பேரும், சீனாவை 42 சதவீதம் பேரும் விரும்பியிருக்கிறார்கள்.
இராக்கை கவனியுங்கள். 73 சதவீதம் பேர், வேண்டாம் என்று ஒதுக்கியிருக்கிறார்கள். பிடிக்கும் என்று வாக்களித்த 23 சதவீதம் பேரில், புஷ், ஒபாமா, ராணுவத்தினர் ஆகியோர் இருக்கக்கூடும். எழுபது சதவீதம் பேருக்கு பாலஸ்தீனம் ஏனோ பிடிக்கவில்லை. ஆப்கனிஸ்தானை 79 சதவிதம் பேர் நிராகரித்திருக்கிறார்கள்.
அமெரிக்கர்களின் மனநிலை இதுதான் என்று இந்த ஒரு சர்வேயை வைத்து திட்டவட்டமாக முடிவுசெய்துவிடமுடியாது என்றாலும் சில Patterns-ஐ புரிந்துகொள்ளமுடிகிறது.
மக்களின் விருப்பு, வெறுப்புகளை பெரும்பாலும் அரசாங்கமே தீர்மானிக்கிறது. இரானில், இராக்கில், ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா போர் தொடுத்துக்கொண்டிருக்கும் காரணத்தால், அந்நாடுகள் குறித்து மாறுபட்ட அல்லது திரிக்கப்பட்ட செய்திகளே அதிகம் வெளியிடப்படுகின்றன. அந்த நாடுகளை அமெரிக்காவுக்குப் பிடிக்காது. எனவே, அமெரிக்கர்களுக்கும். கனடாவும் பிரிட்டனும் ஜெர்மனியும் ஜப்பானும் அமெரிக்காவுக்குத் தேவை. அவர்களுடனான உறவு லாபகரமானது. எனவே, அமெரிக்காவுக்கு அந்த நாடுகளைப் பிடிக்கும். எனவே, மக்களுக்கும் பிடித்திருக்கிறது.
சீனா வளமான நாடு. சீனாவுடன் தொழில், வர்த்தக உறவு கொள்வேண்டியது அத்தியாவசியம். என்றாலும், சீனாவை பிடிக்காதவர்களின் சதவிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணம், சீனா ஓர் அச்சுறுத்தும் போட்டியாளர் என்பதால்தான்.
இந்தியாவில் இப்படியொரு சர்வே எடுத்தால் என்ன ஆகும்? அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பிரிட்டன் ஆகிய நாடுகளை எத்தனை பேருக்குப் பிடிக்கும்? எத்தனை பேருக்குப் பிடிக்காது?
ஏன்?