இணையதளப் பெயரினை தேர்ந்தெடுக்கும் முன் எத்தகைய பணிக்காக இணையதளத்தை உருவாக்க விருக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். காரணம் அதன் அடிப்படையில் தான் இணையதளத்தின் பின்னொட்டு அமைய வேண்டும். உதாரணத்திற்கு, வணிகரீதியானது எனில் .com என்றும், லாப நோக்கமற்றது எனில் .org என்றும் குழுசார்ந்தது எனில் .net என்றும் கல்வி சார்ந்தது எனில் .edu அல்லது .ac என்றும் குறிப்பிட வேண்டும். இந்திய இணையதளம் என்று குறிப்பிட வேண்டுமெனில் .in என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இணையதளப் பெயரினை பதிவு செய்வதற்கான படிநிலைகள் :
- முதலில் அப்பெயர் பதிவிற்கு இருக்கிறதா அல்லது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். http://www.bagfull.net/check.php முகவரியில் இதனை உறுதிசெய்து கொள்ளலாம்.
- பெயர் பதிவுக்கு இருக்குமாயின் நம்முடைய தகவல்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம். எத்துனை ஆண்டுகாலம் பதிவு செய்ய வேண்டுமென்பதையும் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பதிவுக்காலம் முடிந்தவுடன் மீண்டும் பணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.
Extension Registration/yr Renewal/yr Transfer/yr Reg Period .com 350.00 350.00 350.00 1 - 10 yrs .net 350.00 350.00 350.00 1 - 10 yrs .org 350.00 350.00 350.00 1 - 10 yrs .in 650.00 650.00 650.00 1 - 5 yrs .co.in 350.00 350.00 350.00 1 - 5 yrs .org.in 350.00 350.00 350.00 1 yr .asia 850.00 850.00 850.00 1 - 10 yrs .gen.in 350.00 350.00 350.00 1 yr .firm.in 350.00 350.00 350.00 1 yr .ind.in 350.00 350.00 350.00 1 yr .net.in 350.00 350.00 350.00 1 - 5 yrs .info 350.00 350.00 350.00 1 - 10 yrs .us 350.00 350.00 350.00 1 - 10 yrs .biz 350.00 350.00 350.00 1 - 10 yrs .co.uk 400.00 400.00 - 2 yrs .org.uk 400.00 400.00 - 2 yrs .me.uk 400.00 400.00 - 2 yrs .travel 6,000.00 6,000.00 6,000.00 1 yr .jp 4,600.00 4,600.00 4,600.00 1 yr .de 800.00 - - 1 yr .bz 1,400.00 1,400.00 - 1 yr .cn 1,400.00 1,400.00 1,400.00 1 yr .com.cn 1,400.00 1,400.00 1,400.00 1 yr .org.cn 1,400.00 1,400.00 1,400.00 1 yr .net.cn 1,400.00 1,400.00 1,400.00 1 yr .nu 1,400.00 1,400.00 - 2 yrs .ws 900.00 900.00 - 1 yr .tv 1,300.00 1,300.00 - 1 yr .cc 1,200.00 1,200.00 1,200.00 1 yr .name 350.00 350.00 350.00 1 - 10 yrs .ca 900.00 900.00 - 1 yr
- மேற்குறிப்பிட்ட தொகையை செலுத்தி, பெயரை பதிவு செய்துகொண்ட பின், பதிவாளரிடமிருந்து பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.
இது வெறும் பெயர் பதிவு மட்டுமே. இடத்திற்கு தனியாக பணம் செலுத்தி பெயரையும் இடத்தையும் இணைத்துக் கொள்ளவேண்டும். இதன் பிறகு நமது கோப்புகள் பதிவாளர் தந்துள்ள முகவரிக்கு பதிவேற்றம் செய்யப்படும்போது உலகோடு நமது தொடர்பு பரவத் தொடங்குகிறது. தற்போதெல்லாம் பெயர் பதிவு செய்தால் மட்டுமே போதுமானது. ஏராளாமான நிறுவனங்கள் இலவசமாக இடத்தை அளிக்கின்றன.
No comments:
Post a Comment